மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா மற்றும் சிவராத்திரி விழா.! 9 ,11- தேதிகளில் குமரிக்கு உள்ளுர் விடுமுறை ..

2 March 2021, 1:25 pm
Quick Share

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மற்றும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு வருகிற 9 ,11ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா முன்னிட்டு வருகிற 9ஆம் தேதியும், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 11ம் தேதியும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது .

இந்த உள்ளூர் விடுமுறைகளுக்கு ஈடாக வருகின்ற ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமை ,4வது சனிக்கிழமை ஆகிய தினங்கள் மாவட்டத்தில் மாநில அரசு அலுவலக மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
குமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா ,மகா சிவராத்திரி விழாவில் உள்ளூர் விடுமுறை என்பதால் 9 11ம் தேதிகளில் மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கருவூலங்கள் அரசு அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் .இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Views: - 5

0

0