விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள்: விவசாயிகள் வேதனை

2 September 2020, 5:24 pm
Quick Share

தருமபுரி: தொம்பரகாம்பட்டி பகுதியில், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டி கிராமத்தில், ராகி, சோளம், கம்பு, போன்ற சிறு தானியாங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில் உள்ள இலைகளின் மீது வெட்டுக்கிளிகள் அமர்ந்து இலைகளை உண்ணுவதால், செடிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து விடுகிறது. இதனால் விளைச்சல் பாதிப்படைகிறது. வெட்டுக்கிளிகளை அழிக்க விவசாயிகள் மருந்துகள் வாங்கி வந்து தெளித்தாலும்,

மருந்து தெளிக்கப்பட்ட இரண்டு ஓர் நாளில் மீண்டும் வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை சேதப்படுகிறது. இதனை கட்டுபடுத்த முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதே போல் இப்பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால், மேலும் விவசாய பயிர்களை அழித்து விடும் என்பதால் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 0

0

0