விபச்சாரம் நடந்த லாட்ஜ் சீல்: இருவர் கைது

Author: kavin kumar
30 September 2021, 1:29 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் நகரில் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய லாட்ஜ்க்கு சீல் வைக்கபட்டது.

அரியலூர் நகரில் திருச்சி சாலையில் உள்ளது வாசவி லாட்ஜ். இதனை கீழப்பழூவூரை சேர்ந்த வெற்றிகண்ணன் என்பவர் 6 மாதத்திற்கு ஒப்பந்தம் செய்து ஸீஸ்க்கு எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த லாட்ஜை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று சோதனை செய்ததில் 4 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அந்த பெண்களை தமிழ்நாடு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விடுதியில் ஏஜெண்டாக செயல்பட்ட வெற்றிகண்ணன் மற்றும் தரகராக செயல்பட்ட சேகர் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அந்த லாட்ஜ்க்கு சீல் வைக்க மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அரியலூர் கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் வாசவி லாட்ஜிற்கு சீல் வைத்தனர்.

Views: - 304

0

0