பத்திரபதிவு மற்றும் வணிகவரித்துறைக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு… அமைச்சர் வீரமணி பேட்டி…

6 August 2020, 7:16 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு உணவு வழங்கியதில் எந்த முறைகேடுமில்லை என்றும், இது அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்ட 18 அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதனை தமிழக பத்திரபதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி அங்கன்வாடி மையத்தை இடையஞ்சாத்தில் திறந்து வைத்து சத்துமாவுகளை வழங்கினார். அதன் பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீதமுள்ள 17 அங்கன்வாடி மைய சாவிகளை பொறுப்பாளர்களிடம் அமைச்சர் வீரமணி வழங்கினார் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் ,ஆவின் தலைவர் வேலழகன்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வீரமணி கூறியதாவது:- வேலூர் நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிகள், புதியபேருந்து நிலையம், கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் 2021 ஆம் ஆண்டு முடிக்க இருந்தோம். கொரோனா பாதிப்பு தொழிலாளர்கள் இல்லாததால் தோய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணிகளை விரைந்து முடிப்போம். கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறையில் ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சுமார் 40 ஆயிரம் கோடி வருவாய்குறைந்துள்ளது.

வருவாய் குறைந்தாலும் தமிழக அரசு அறிவித்த திட்டங்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தமாட்டோம். முழுமையாக செயல்படுத்துவோம். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது. இதில் அரசியல் உள்நோக்கத்துடன் வந்ததியை பரப்புகிறார்கள். அது போன்று எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஈபாஸ் பெறுவதில் விதிமுறைகளை பின்பற்றி தான் ஈபாஸ் வழங்கப்படுகிறது. முறைகேடுகளை செய்தவர்கள் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Views: - 7

0

0