காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

4 March 2021, 7:49 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ரிஷிகேஷ் வயது 19. இவர் வியாசர்பாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே கல்லூரியில் பயிலும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு அவரின் வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ய உள்ளதாகவும் இதனால் கடந்த சில நாட்களாகவே ரிஷிகேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் , வீட்டில் யாரும் இல்லாத போது புடவையால் மின்விசிறியில் தனக்குத் தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு வீடு திரும்பிய அவரது தந்தை தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு வியாசர்பாடி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1

0

0