புதுச்சேரி கடற்கரையில் காதலர்கள் சாதி மறுப்பு திருமணம்

11 November 2020, 3:47 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், காதலர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

புதுச்சேரி பிச்சுவீரன்பேட் பகுதியை சேர்ந்த லிங்க சுப்ரமணியனும் (ஆதிதிராவிடர் பிரிவு), ஹேமலதாவும்(பிராமணர் பிரிவு) மணக்கோலத்தில் இன்று கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்தனர். பின்பு இருவரும் பவுத்த மதப்படி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். மாலை மாற்றிக்கொண்டும் தாலிக்கட்டிக்கொண்டும் திருமணம் முடித்தவர்கள் அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகளை வாசித்து எடுத்துக்கொண்டனர்.

இருவரும் கல்லூரி படித்த போது பழக்கம் ஏற்பட்டு 4 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஹேமலதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது காதலனுடன், இன்று ஹேமலதா சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

Views: - 22

0

0