கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி

13 August 2020, 11:10 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கூலி படை வைத்து கணவனை கொள்ள முயற்சித்த மனைவி மற்றும் கூலிபடையை சேர்ந்த இரண்டு பேர்கள் உட்பட மூன்று பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (39) இவர் அமெச்சூர் வீடியோ கிராபர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31) இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இந்த அளவுக்கு காயம் ஏற்படாது மேலும் அவர் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு மண்டை ஓடு சேதமாகி உள்ளதாகவும் அவரது விலா மற்றும் மர்ம உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது. இதனை மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதாகவும் அதேநேரம் கணேஷின் மனைவியும் தனது அண்ணியுமான காயத்ரி கூறுவது போன்று அவர் கட்டிலில் இருந்து கீழே விழ வாய்ப்பில்லை இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளதாகவும் சந்தேகிப்பதாக கணேஷின் சகோதரர் ரமேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்ததில், காயத்ரிக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், அவர் மூலம் கூலி படைகளை கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்தி வரும் கணவரை கொல்ல திட்டமிட்டு உள்ள சதி வெளி வந்து உள்ளது. இதன் மூலம் காயதிரியை கைது செய்த போலீசார் கூலி படையை சேர்ந்த இரண்டு பேர்களையும் கைது செய்தனர். தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர். கணவரை மனைவியே கூலி படையை கொண்டு கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.