விமான நிலையத்தில் 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்: கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என விசாரணை

Author: Udhayakumar Raman
4 August 2021, 7:29 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சுமார் 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 15 நாட்களாக வாகன நிறுத்தத்தில் பகுதியில் சொகுசு கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன நிறுத்தத்தை நடத்திவரும் பணியாளர்கள் திருச்சி விமான நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரின் முன்பகுதியில் உள்ள சக்கரத்தில் போலீசார் வளையம் போட்டு பூட்டியுள்ளனர். கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு கார் குறித்து யாரும் அதை விசாரிக்க வரவில்லை.

மேலும் இதுகுறித்து சார்பில் விமான நிலையம் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வௌிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்ததற்காக ரகசிய தகவலின் பேரில் மத்திய வருவாய் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரர்கள் சிலர் கைது செய்தனர். அவர்களில் கைது செய்யப்பட்டவர்களின் காராக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 125

0

0