மதுரை மாநகராட்சியின் ஏலம் திடீர் ரத்து: ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

By: Udayaraman
27 July 2021, 4:27 pm
Quick Share

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவாய் இனங்கள் ஏலம் விடப்படும் திடீர் ரத்து செய்யப்பட்டது,

மதுரை மாநகராட்சியின் தினசரி வாரசந்தைகள், வாகன காப்பகம்கள், குளியலறை, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான ஏலம் மதுரை மடீட்சியா அரங்கில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஏலத்தில், பங்கேற்போர், ஒட்டப்பட்ட கவரில் ஏலத்தொகையை பூர்த்தி செய்து பெட்டியில் போட்டு கொண்டுருந்த நிலையில், திடீரென்று அலுவல் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி டென்டர் ரத்து என மதுரை மாநகராட்சி அறிவித்தது. ஏலம் மறுதேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஏலமெடுக்க காலையிலிருந்து காத்திருந்தவர்கள் எரிசலுடன் ஏமாற்றமடைந்தனர். இதில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 97

0

0