மதுரையில் குடியரசு தின கொண்டாட்டம்: தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை..!!

26 January 2021, 11:38 am
madurai flag - updatenews360
Quick Share

மதுரை: 72வது குடியரசு தினத்தையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 72வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தேசிய கொடியேற்றினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 91 பயனாளிகளுக்கு 21லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் 149 காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும்,263 பேருக்கு சிறந்த பணிகளுக்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் தென்மண்டல காவல்துறை ஐஜி முருகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மரியாதையை அவர்களது வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சியர் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0