சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: 2 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது

Author: Udhayakumar Raman
6 August 2021, 1:28 pm
Quick Share

மதுரை: மதுரையில் சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவன என்ற பெயரில் அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பலரையும் ஏமாற்றி 2 கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மதுரை பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

மதுரை பெத்தானியபுரம் பகுதியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தில் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்கிற பெயரில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து அதன்மூலம் உறுப்பினர்களுக்கு நிதி பங்கீடு செய்து வழங்குவதாக தெரிவித்து தன்னை ஏமாற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்த ஈஸ்வரி என்பவருக்கு உரிய பங்கீடு தொகையை தராமல் ஏமாற்றியதாக மதுரையில் உள்ள பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஈஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பலரிடமும் இதேபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த குற்றப்புலனாய்வு பிரிவினர் தம்பதியினரிடம் பணத்தை பறிகொடுத்த உறுப்பினர்கள் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 179

0

0