திருமங்கலம் ஸ்ரீ புஷ்கலை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!!

Author: Aarthi Sivakumar
27 August 2021, 8:05 pm
Quick Share

மதுரை: திருமங்கலம் அருகே ஸ்ரீ புஷ்கலை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள , ஸ்ரீபுஷ்கலை அய்யனார் சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீபுஷ்கலை அய்யனார் சாமி , முத்துகருப்புசாமி மற்றும்இருபத்தி ஒரு பரிகார தேவாலய திருக்கோவில்களிலும் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , வேதவிற்பன்னர்கள் யாகசாலை பூஜைகள் நடத்தி பூஜையில் வைக்கப்பட்ட கலச தீர்த்தத்தில் சிறப்பு பூஜை நடத்திய பின்பு வேதவிற்பன்னர்கள் கோபுரத்தின் மேலுள்ள கலசத்திற்கு சம்ப்ரோக்ஷணம் செய்வதற்காக பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களை எடுத்துச் சென்று , மகா சம்ப்ரோக்ஷணம் செய்து கும்பாபிஷேக விழா நடத்தினர்.

இவ்விழாவில் அருகாமையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி , கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் . இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Views: - 130

0

0