மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட கூலி வழங்கல் முறையில் சாதி ரீதியான பிரிவினை:அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

21 June 2021, 4:32 pm
Quick Share

மதுரை: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட கூலி வழங்கல் முறையில் சாதி ரீதியான பிரிவினையை மேற்கொள்ளும் ஒன்றிய அரசின் நடைமுறையை கைவிடக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி செலவினத்தை சாதிவாரியாக பிரித்து தொகுக்க அனைத்து மாநில அரசுகளை ஒன்றிய அரசு கோரியுள்ளது. ஒரே வேலை ஒரே ஊதியத்திற்கு உரிமை கொண்டாடும், உழைப்பாளிகளை இவ்வாறு சாதிரீதியாக பிரிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இது நடைமுறையில் கூலி வழங்குவதை பாதிக்கும் எனக்கூறி கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு பயன்படும் வகையில், இந்தத் திட்டத்தில் இணைந்து உள்ள குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 200 நாட்கள் வேலை, குறைந்த பட்சம் 600 ஊதியம் மற்றும் கூலியை உரிய நேரத்தில் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 89

0

0