மகேந்திரா வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்து: 9 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

4 November 2020, 4:24 pm
Quick Share

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே மகேந்திரா வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் வேனில் வந்த 15 பேரில் 9 பேர் காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கார்களின் வயர்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அரக்கோணத்தில் இருந்து ஆட்களை ஏற்றி வந்த மகேந்திரா வேன் சுங்குவார்சத்திரம் வழியாக வல்லம் சிப்காட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மகேந்திரா வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேன் தலைகீழாக கவிழ்ந்து அப்பளம் போல் முன்பாகம் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 பேர்களில் 9 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு பேருக்கு மட்டும் இன்ஜின் ஆயில் ஊற்றியதில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் இவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 21

0

0