பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுப்பு

28 August 2020, 10:02 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும், நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் வெளியில் சென்று வருவதாக கூறுவிட்டு,

சென்ற நிலையில் இன்று ஆலங்குப்பம் பாசன கால்வாய் பாலத்தின் கீழ் இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து ரமேஷின் முகத்தில் வெட்டுகாயங்களுடன் இறந்த கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு பாலத்தின் கீழ் உடலை வீசி சென்றனரா ? அல்லது மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் இறந்தாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 30

0

0