கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்: உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை

Author: kavin kumar
17 August 2021, 2:56 pm
Quick Share

வேலூர்: சுடுகாட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை காவல்துறையினர் மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஸ்பா சுடு காட்டிற்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர்.

மேலும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த புஜ்ஜி என்கிற விக்னேஷ் (24) என்பதும் இவர் மீது வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 574

0

0