கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

Author: Udhayakumar Raman
24 June 2021, 6:32 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று பார்த்தபோது கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், உடல் இருந்ததை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கை கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், இவரை ஏரியில் தள்ளிவிட்டு யாரேனும் கொலை செய்தனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பழவேற்காடு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 184

0

0