டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணா ராவ் நியமனம்

Author: kavin kumar
8 October 2021, 5:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அரசு சார்பில் உள்ள பல்வேறு பதவிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு ஆணையை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு அமைச்சருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 192

0

0