கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது…

12 August 2020, 11:20 pm
Quick Share

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழியில் மோட்டார் பைக்கில் சென்று கஞ்சா விற்பனை செய்ததாக நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கஞ்சா மூடைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து கொண்டுள்ளன. நேற்று முன்தினம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்றதாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ஆரல்வாய்மொழி பகுதியில் மோட்டார் பைக் மூலம் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை நடத்தியதில், நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்த ராமையா என்ற வாலிபர் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராமையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இ – பாஸ் இல்லாமலே வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டதிற்குள் சர்வ சாதரணமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக குற்றசாட்டுகள் உள்ளது.

Views: - 36

0

0