சட்டவிரோதமாக மது விற்ற ஒருவர் கைது: ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

15 May 2021, 4:36 pm
Quick Share

திண்டுக்கல்: பழனி அருகே ஆயக்குடியில் சட்டவிரோதமாக மது விற்ற ஒருவரை போலீசார் கைது செய்து, ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் மதுக் கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சில்லறையில் கூடுதலாக மது விற்பனை செய்வதாக பழனி டிஎஸ்பி சிவா அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விற்பனைக்காக வைத்திருந்த 1000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 135

0

0