குடிபோதையில் நண்பனை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது….

Author: Udhayakumar Raman
14 September 2021, 8:31 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் குடிபோதையில் நண்பனை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பரான வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இருவரும் மது அருந்தி விட்டு வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு ட்ரங்க் சாலையில் உள்ள கோயில் அருகில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாய்த்தகராறு முற்றி அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அருகில் இருந்த காய்கறி கடையில் இருந்து கத்தியை எடுத்து வந்து சந்தோஷ் குமாரை சரமாரி யாக வெட்டியுள்ளார். இதில் தலை, கை ,கால் என பல இடங்களில் காயமடைந்த சந்தோஷ்குமார் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த விக்னேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் எம்.கே.பி நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 130

0

0