அனல்மின் நிலையத்தில் ஏர் கம்பரசரை திருடிய ஒருவர் கைது: தலைமறைவான 2 பேருக்கு தனிப்படை வலை

Author: Udhayakumar Raman
25 July 2021, 8:31 pm
Quick Share

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான ஏர் கம்பரசரை திருடிய ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து, மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை நான்கில் 1200மெகாவாட் மின் உற்பத்திக்காக விரிவாக்க கட்டுமானப் பணிகள் ஊரணம்பேடு கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரியும் ஒப்பந்ததாரர் விமல் என்பவர் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான ஏர் கம்ப்ரசர்
திருடு போனதாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யாவிடம் திருடுபோன ( ஏர் கம்ப்ரசர்’) காற்றழுத்த கருவி இருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவரை கைது செய்த காட்டூர் காவல் நிலைய போலீசார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ், வினோத் இருவரையும் தனிப்படை போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யாவை பொன்னேரி குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 166

0

0