இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்: 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

20 July 2021, 4:32 pm
Quick Share

வேலூர்: வேலூரில் போலீசார் வாகன தணிக்கையில் போது இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்த 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி இருச்சக்கர வாகனம் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா தலைமையில் ஓட்டேரி கூட்ரோட்டில் பாகாயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர் வேலூர் அடுத்த அத்தியூரை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது-19) என்பது தெரியவந்தது மேலும் அவர் முன்னுக்கு பின்னாக தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது-21)ஆகியோர் வேலூர்,பாகாயம், அறியூர், வடக்கு காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால கிருஷ்ணனை கைது செய்தனர்.மேலும் துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருந்த மொபட் உள்ளிட்ட 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 216

0

0