லிப்டில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றவர் கைது: தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த விபரீதம்

21 September 2020, 11:12 pm
Quick Share

கோவை: கோவை அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சித்தார்த்-மோனிஷா தம்பதியினர். இவர்கள் வசித்து வரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேசன் (49). சிங்காநல்லூர் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். தனது வீட்டின் அருகில் வசிக்கும் மோனிஷாவை கனேசன் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன் தகாத வார்த்தைகளில் தேவையின்றி திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மோனிஷா தனது குழந்தையுடன் தரை தளத்தில் இருந்த போது அங்கு வந்த கணேசன் தகாத வார்த்தைகள் பேசியதால் அச்சம் அடைந்தவர் லிப்டில் ஏற முற்பட்டவரை பின் தொடர்ந்த கணேசன் அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் மோனிஷாவின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து மோனிஷா சத்தம் போடவே அங்கிருந்து கணேசன் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து மோனிஷா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 8

0

0