மைனர் பெண்ணுக்கு திருமணம் – மணமகன் உட்பட மூவர் கைது

27 November 2020, 8:13 pm
Quick Share

மதுரை: திருமண வயதை அடையாத மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய முயன்ற குற்றவாளிகள் மூன்று பேரை குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மைனர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நல அலுவலர் யோகம்மாள் புகார் அளித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்தப் பெண் மைனர் என்பதை உறுதி செய்தனர்.

பிறகு இதற்கு காரணமான பொன்மேனி சொக்கலிங்க நகரைச் சேர்ந்த மணமகன் வினோத்குமார் (27), அவரது தாயார் ராஜேஸ்வரி (45), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த சுமதி (43) ஆகிய மூவரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006ன்படி இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மதுரை நகர் பகுதியிலேயே மைனர் பெண் ஒருவருக்கு திருமணம் நடத்த முயன்ற சம்பவம் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0