சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற இருவர் போக்சோ சட்டத்தில் கைது

3 March 2021, 10:54 pm
Quick Share

சிவகங்கை: திருப்புவனம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் சொந்தரவு கொடுத்த இருவரை பூவந்தி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழக்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி (44) மற்றும் சின்னபாண்டி (35) ஆகிய இருவரும் அதே ஊரில் இருக்கும் 13 வயது சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச் சென்று கேபிள் வயர் இழுப்பதற்காக வந்துள்ளோம் என்று கூறி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் சரிதாபாலு துரைப்பாண்டி மற்றும் சின்னப்பாண்டி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 23

0

0