ஏ.டி. எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி:ஒருவர் கைது
Author: kavin kumar31 October 2021, 1:56 pm
சென்னை: சென்னையில் ஏ.டி.எம்., இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பேக்கரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி வள்ளுவன் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த செம்பியம் போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் இருந்த ஒரு டீ கடையில் சந்தேகத்திற்கிடமாக வட மாநில இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பாட்னா பகுதியை சேர்ந்த அனில் கமார் என்பது தெரிய வந்தது.
அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அனில்குமார் தான் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவனிடம் நடத்திய விசாரணையில் கைச்செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றேன். ஆனால் ஏடிஎம் மிஷினை உடைக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனில் குமார் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவனை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0