தோசைக்கல்லால் அடித்து பாட்டியைக் கொன்ற பேரன்: தலைமறைவான பேரன் கைது

Author: Udhayakumar Raman
25 September 2021, 3:28 pm
Quick Share

திருவள்ளூர்: சோழவரம் அருகே தோசைக் கல்லால் அடித்து பாட்டியை கொன்றுவிட்டு தலைமறைவான பேரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள பசுவன்பாளையத்தில் வசித்து வந்தவர் சுசீலா(வயது80). இவரின் மகன் ரங்கநாதன். இவரது மகன் ஜெகன். சென்னை வானகரத்தில் வசித்து வந்த நிலையில் மதுப்பழக்கம் உடைய ஜெகன் வேலைக்கு எதுவும் செல்லாத நிலையில், அவர்களின் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில்
இரு தினங்களுக்கு முன்னாள் பசுவன்பாளைத்தில் உள்ள தனது பாட்டி சுசீலா வீட்டிற்கு வந்து தங்கிய ஜெகன் குடிபோதையில் இருந்துள்ளார். ஜெகன் அவரின் பாட்டியை தோசைக் கல்லால் அடித்துள்ளார். அப்போது மயங்கி விழுந்த பாட்டியின் கழுத்தில் காலை வைத்து மிதித்து உள்ளார். இதனால் சுசீலா உயிரிழந்தார். இதற்கிடையில் பக்கத்து வீட்டு ஆட்கள் பாட்டி வெளியில் வராததை அறிந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர், ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பெயரில் சோழவரம் போலீசார் அங்கு விரைந்து வந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்தது வழக்குப்பதிவு செய்து பாட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான பேரன் ஜெகனை சோழவரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் வானகரத்தில் அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், பாட்டி சுசிலா குடித்து விட்டு தனது வீட்டிற்கு வரக்கூடாது என அவரை கண்டித்ததால் மது போதையில் இருந்த அவர் ஆத்திரத்தில் தோசைக் கல்லால் தாக்கி அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. பேரனுக்கு குடிக்கக்கூடாது என புத்தி சொல்லி கண்டித்த பாட்டியை மதுபோதையில் ஆத்திரத்தில் கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 116

0

0