தனியார் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்திய நபர்: குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
18 August 2021, 3:31 pm
Quick Share

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் தொலைக்காட்சி மீது ராஜேஷ்குமார் என்ற நபர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனைத்து செய்தியாளர்கள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மவாட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காட்சி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து செய்தியாளர்கள் சார்பில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் ராஜேஷ்குமார் என்ற நபர் ஒருவர் வாள் மற்றும் கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாளால் சரமாரியாக தாக்கி அடித்து உடைத்தார். இந்த அத்துமீறலை கண்டித்தும் ராஜேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், நடுநிலையுடன் செயல்பட்டு வரும் தொலைக்காட்சிகள் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி இந்த ஆர்பாட்டத்தில் திரளான செய்தியாளர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 523

0

0