மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
Author: kavin kumar12 August 2021, 3:33 pm
திருச்சி: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் அதிமுக அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம். அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற திருச்சி மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் தொகுதியில் உள்ள மக்களுக்கு பணியாற்றும் செயல்களைப் பாராட்டி மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டினார். மேலும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். கட்சி மாண்பை மீறி எதிராக செயல்பட்டதால் அதிமுக தலைமைக்கழகம் அவரை கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முருகானந்தம் தலைமையில் அதிமுக வினர் மற்றும் அமமுக,
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோர் சமயபுரம் நால்ரோட்டிலிருந்து அனைவரும் ஊர்வலமாக வந்து திமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து திமுக எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் திமுக கட்சியில் அனைவரும் இணைந்தனர். இது குறித்து முன்னால் அதிமுக நிர்வாகி முருகானந்த்ம் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- கடந்த 10 ஆண்டுகளாக இருட்டில் கிடந்த மண்ணச்சநல்லூர் தொகுதியை எம்எல்ஏ கதிரவன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு எம்எல்ஏக்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர் அவற்றின் ஆதாரங்களை திரட்டி விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன் என கூறினார்.
0
0