இந்திய – சீன எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த லால்குடி ராணுவ வீரர் விபத்தில் பலி

2 July 2021, 5:39 pm
Quick Share

திருச்சி: இந்தியா – சீன எல்லையான சிக்கிம் பகுதியில் நடந்த விபத்தில் லால்குடி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பலியானார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் ராஜம்மாள் இவர்களது மகன் தேவ ஆனந்த் ( 25 ) இவருக்கு அண்ணன் சம்மனசு மற்றும் அக்கா ரீட்டா மேரி உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். தற்போது இந்தியா – சீனா எல்லையான சிக்கிம் பகுதியில் உள்ள ரானுவ தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 30 ம் தேதி சிக்கிம் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்து ராணுவ டிரக்கில் முகாமிற்கு திரும்பும்போது திடீரென விபத்தில் தடம் புரண்டு மலையில் விபத்துக்குள்ளானது வண்டியில் பயணம் செய்த தேவ ஆனந்த் உட்பட 6 பேர் பலியாயினர். தேவ ஆனந்த் பலியான தகவல் ராணுவ அதிகாரிகள் மூலம் வீட்டிற்கு பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல எம்பி திருச்சி சிவா முயற்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் விமானம் மூலம் நாளை சொந்த கிராமத்திற்கு செல்கிறது.

Views: - 113

0

0