லஞ்சமின்றி படித்த திறமையான ஆண்கள்,பெண்களுக்கு அரசு வேலை பெற்று தருவேன்: திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி

Author: Udhayakumar Raman
26 March 2021, 10:31 pm
Quick Share

திருச்சி: லஞ்சமின்றி படித்த திறமையான ஆண்கள்,பெண்களுக்கு அரசு வேலை பெற்று தருவதாக திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாளவந்தி, ஜம்புநாதபுரம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வேட்பாளர் கதிரவனுக்கு ஆராத்தி எடுத்து, பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர் அவர் மக்களிடம் பேசியதாவது:- இப்பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை விரைவில் நிறைவேற்றி தருவேன். அதிமுக எம்எல்ஏ தொகுதி பக்கமே வருவதில்லை என்கின்றனர்.

ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன். 3 மாதத்திற்கு ஒரு முறை வந்து உங்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன்.6 மாதத்திற்கு ஒருமுறை வேலை வாய்ப்பு முகாம் அமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். படித்த திறமையான ஆண்கள்,பெண்களுக்கு அரசு வேலை பெற்றுத் தரும் போது எவ்வித லஞ்சமின்றி வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவேன் எனப் பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Views: - 50

0

0