வயலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட வாய்த் தகராறு: விவசாயி கல்லால் அடித்துக் கொலை….

Author: Udhayakumar Raman
25 September 2021, 2:54 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு சித்தாம்பூரைச் சேர்ந்த பொண்ணம்பலம் மகன் மருதை என்கின்ற மணி (50) அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (46). மணி ஊருக்கு அருகில் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக அய்யாலக்கரை வாய்க்காலிருந்து புறம்போக்கு நிலத்தின் வழியாக குழாய் மூலம் தன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் வயலுக்கு பக்கத்தில் செந்தில்குமார் மற்றும் அவரது சகோதர்களுக்கு சொந்தமான சொந்தமாக 50 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதில் செந்தில்குமார் புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மணியிடம் இந்த வழியாக தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறு சில நாட்கள் நீடித்த நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டது. இதில் செந்தில்குமார் பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு) மற்றும் வாத்தலை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான விவசாயி குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 165

0

0