அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதன் முறையாக தமிழ் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்த ஊக்குவிக்கும் புதிய முயற்சி

17 November 2020, 9:54 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முதன் முறையாக தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்த ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் நடைப்பெற்றது.

தற்போது பெருகி வரும் தொழிற் நுட்பங்களால் பள்ளி மாணவ,மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் திறன் குறைந்து கொண்டு வருகிறது. அதை மேம்படுத்த வேண்டும் என ஒரு புது முயற்சியாக துபாயில் உள்ள எஸ் 2 எஸ் ( சர்வீஸ் டு சொசைட்டி) அமைப்பு மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து அரசுப் பள்ளி மாணவ வாசகத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழ் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து முதன் முறையாக இணையதளம் வழியாக தமிழ்ப் புத்தங்களை வாசித்தனர்.

இதில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள் 3 பேர் பங்கேற்றனர். இதில் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த மாணவி நித்யா நெறியாளராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அழகியமனவாளத்தை சேர்ந்த மாணவி ரேணுகாதேவி மற்றும் பெரமங்கலத்தை சேர்ந்த கீர்த்தனா தாங்கள் வாசித்த புத்தகத்தை விமர்சனம் செய்தனர். இந்த புத்தகம் வாசிக்கும் நிகழ்வில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப்பள்ளி 10 ம் வகுப்பு மாணவிகள் ஷர்மிளா, நேத்ரா,

ஈரோடு குருமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவிகள் ரம்யா,கோபிகா, தஞ்சாவூர் மாவட்டம் விசலூர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி 5 ம் வகுப்பு மாணவிகள் தர்ஷினி,ரேஷ்மா, காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகர்மன்ற உயர்நிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவன் தினேஷ்,6 ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகிய 10 மாணவ,மாணவிகள் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக சென்னையைச் சேர்ந்த கல்வியாளர்,உளவியல் ஆலோசகர் உலகம்மாள் மாணவிகளிடம் உரையாற்றினார். நன்றியுரையை நிகில் கம்யூனிகேஷன்ஸ் நிகில் முருகனும்,நிறைவுரையை எஸ் 2 எஸ் நிறுவனர் ரவி சொக்கலிங்கமும் வழங்கினார்கள்.

Views: - 18

0

0