போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடைபெறவுள்ள பாலப்பணிகளை எம்எல்ஏ ஆய்வு…

15 July 2021, 3:32 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள பழமையான பாலங்களை புதுப்பிக்கவும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 10.40 கோடி செலவில் நடைபெற்றவுள்ள பாலப்பணிகளுக்கான இடத்தினை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ சீ. கதிரவன் ச.கண்ணனூர் பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் சமயபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் புள்ளம்பாடி வாய்க்காலில் கடந்த 1959 ம் ஆண்டு அமைக்கப்பட்ட பாலங்கள் மிகவும் குறுகியதாகவும், பாலம் வலுவிழந்து இடியும் தருவாயில் உள்ளன. இது குறித்து அப் பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவனிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அப் பகுதியில் வாழும் மக்களுக்கும்,

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ச. கண்ணனூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால்களில் பாலம் கட்ட முடிவு செய்தனர். புள்ளம்பாடி வாய்க்காலில் பாலம் கட்டும் இடமான நரசிங்கமங்கலம், சேனியர் கல்லுக்குடி,, அண்ணாநகர் மற்றும் பெருவளை வாய்க்காலில் பாலம் கட்டும் இடமான இனாம் சமயபுரம், மாணிக்கபுரம் ஆகிய 5 இடங்களில் மொத்தம் ரூ. 10 .40 கோடி செலவில் பாலம் கட்டுவதற்கான இடத்தினை பேரூராட்சி அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Views: - 54

0

0