கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு: முக்கொம்பு சுற்றுலா தலம் மூடல்: ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்

Author: Udayaraman
1 August 2021, 4:57 pm
Quick Share

திருச்சி: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை பகுதியில் முக்கொம்பு பொழுது போக்கு பூங்கா உள்ளது. இந்த சுற்றுலாத் தலத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பத்துடன் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு வருவதால் அதிக கூட்டம் வரும் வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

அதன் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு நாளில் அதிகளவில் கூட்டம் வரும் என்ற நிலையில் முக்கொம்பு சுற்றுலாத்தலம் தேதி குறிப்பிடாமல் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா தலத்திற்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 88

0

0