உஜ்ஜயினி கோயில் வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

6 November 2020, 5:53 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் உஜ்ஜயினி கோயில் வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள மாகாளிகுடி அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில் வளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான யானை வசிக்கும் பகுதியில் காட்டில் நடப்போம் மியாவாக்கி அடர்காடு திட்டத்தின் கீழ் 57 வகை நாட்டு மரங்களான 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது. காட்டில் நடப்போம் மியாவாக்கி அடர்காடு திட்டத்தின் கீழ் டிரை அமைப்பின் சார்பில் மகிழம்,

சொர்க்கம், நீர்மருது, மலைவேம்பு, புங்கமரம், பாதாம், தேக்கு, வேங்கை, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட 57 நாட்டு மர வகையான10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர். மியாவாக்கி அடர்காடுகள் உருவாக்குத் திட்டத்தை லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன் ஏற்படுத்தினார். விழாவில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, ஊராட்சி் ஒன்றிய அலுவலர்கள், தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Views: - 17

0

0