அனுகு சாலை,சுரங்கப்பாதை அமைக்க கோரி சாலை மறியல்: திருச்சி சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Author: Udayaraman
24 July 2021, 5:57 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே வடுகர்பேட்டையில் அனுகுசாலை,சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியானது தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலகோவன்டா குறிச்சி ஊராட்சி வடுகர்பேட்டை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சாலையை கடந்து விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் கல்லறைக்கு செல்வதற்கும், 300 வருடம் பழமை வாய்ந்த ஆலயத்திற்கும் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலையைக் கடப்பதற்கு பொதுவான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பாதுகாப்பான அனுகுசாலை,

சுரங் கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள். கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் சாலையில். அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி வருவாய் வட்டாட்சியர் சித்ரா மற்றும் காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின. கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இப்பகுதியில் சாலை பணிகள் அமைக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதி கூறியதால் மக்கள் சாலைமறியல. போராட்டத்தினை கைவிட்டனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Views: - 127

0

0