தேமுதிக கல்வெட்டு அமைத்தற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு

16 September 2020, 10:34 pm
Quick Share

திருச்சி: லால்குடியில் தேமுதிக கட்சியின் 16 வது ஆண்டு துவக்க விழா கல்வெட்டில் கட்சியின் தலைவர் பெயர் இல்லாததால் , கல்வெட்டு மற்றும் கொடி கம்பம் அமைத்ததற்கு தேமுதிக லால்குடி ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ், மாநில பொதுக்குழு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையான லால்குடி ரவுண்டானாவில் தேமுதிக திருச்சி மாவட்ட அவைத் தலைவர் லா. முருகேசன் தலைமையில் கல்வெட்டு மற்றும். கட்சி கொடி ஏற்றினர். கல்வெட்டில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பெயர் இல்லை, அதே போல ஒன்றிய கழக, பேரூர. கழக நிர்வாகிகள. பெயர் இல்லை எனவும், கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டினை மீறி செயல்பட்ட மாவட்ட அவைத் தலைவர் மீது நடவடிக்கைகள் எடுத்து கேப்டன் விஜயகாந்த் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை வைக்கவேண்டுமென லால்குடி ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் சார்பில் வலியுறுத்துவதாக லால்குடி ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 9

0

0