பெட்ரோல் பங்கில் 1 கோடியே 11 லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது

5 March 2021, 9:18 pm
Quick Share

கோவை: கோவை சூலூர் பகுதியில் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றியவர் முறைகேடான போலி ரசீது தயாரித்து 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 11 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

கோவை சூலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 3 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. அந்த லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளராக விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். அவர் கடந்த 2017 முதல் 2019 வரை தன்னுடைய நிறுவனத்தில் அனந்தநாராயணன், பல்லடத்தில் சேர்ந்தவரை மேனேஜராக பணியில் அமர்த்தி இருந்தார். அவர் தொடர்ந்து 3 பெட்ரோல் பங்கை பங்கையும் நிர்வகித்து வந்தார். இந்த சூழ்நிலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இன் உடைய அனைத்து வரவு செலவு கணக்கு களையும் பெட்ரோல் இறக்கக் கூடிய அனைத்துப் பொறுப்புகளையும் அவர் கவனித்து வந்தார்.

இதன் மூலமாக சங்கம் சார்பாக பெட்ரோல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தாமல் போலியான ரசீது தயாரித்து கணக்கு காட்டிவிட்டு தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்தில் செயலாளர் விஸ்வநாதன் புகார் அளித்தார். அதன்படி சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளி பல்லடத்தைச் சேர்ந்த அனந்தநாராயணன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கோவை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 408 420 468 34 iPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 2

0

0