கொரோனா வார்டில் உணவு வழங்குவதில் முறைகேடு: பெண் நோயாளி வெளியிட்ட வீடியோ

31 August 2020, 10:45 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உணவு வழங்குவதில் முறைகேடு உள்ளதாக கூறி பெண் நோயாளி வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதாற்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி, திருவாரூர் திருவிக அரசு கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் கொரானா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 3 ஆயிரத்து 586 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 42 பேர் நபர்கள் இறந்துள்ளனர்.

கொரோனா நோய் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்காக ஒரு நாளைக்கு தமிழக அரசு ரூ. 250 வழங்குகிறது. இந்நிலையில் மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட 64 பேர் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு உணவு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தின் உணவு தரமானதாக இல்லை என்று கொரோனா நோயாளிகள் குற்றம் சாட்டி வந்தநிலையில், நேற்று இரவு வந்த கிச்சடி உணவு சரியில்லாத காரணத்தால் 64 பேர் சாப்பிடாமல் உணவை புறக்கணித்துவிட்டு மருத்துவரிடம் முறையிட்டுள்ளனர்.

மேலும் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ளவர்களுக்கு மாஸ்க், சானிட்டைசர், சோப்பு உள்ளிட்ட பொருட்களை அரசு மருத்துவமனையில் வழங்கவில்லை, நோயாளிகள் பயன்படுத்தும் பெட்ஷிட் மாற்றுவதில்லை என கூறும் நோயாளிகள், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கவேண்டும். ஆனால் அங்குள்ள பணியாளர்கள் நீங்கள் காசு கொடுத்தால் பால் வாங்கி வந்து தருகிறோம் என சொல்வதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தலைமை மருத்துவராக உள்ள டாக்டர் விஜயகுமார் கண்டு கொள்வதில்லை.

கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கைவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பெண்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் பெண் வெளியிட்டள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 0

0

0