பணத்திற்காக தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன்…
4 August 2020, 5:04 pmதிருவாரூர்: மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்த செல்லவராசு மகன்கள் சிவக்குமார், குமரவேல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சிவக்குமார் தனது தம்பி முருகவேலிடம் கத்தியை காட்டி 3ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமரவேல் வீட்டிலிருந்து வெளியே ஓடினார். அவரை பின் தெடர்ந்து துரத்தி சென்ற அண்ணன் சிவக்குமார் கோட்டூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே வைத்து தம்பி குமரவேலுவை வயிற்றில் கத்தியால் குத்தினார்.
இதனால் அலரல் சத்தும் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமரவேலுவை மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மருந்துவமனையில் குமரவேல் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். தம்பியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அண்ணன் சிவக்குமார் மீது கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். 3ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அண்ணன்னே தம்பியை கொலை செய்த சம்பவ கோட்டூர் பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.