ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் – பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!

22 November 2020, 6:57 pm
Quick Share

தருமபுரி: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், கடந்த மூன்று நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் நேற்று விநாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களுடைய குடும்பங்களுடன் சென்று எண்ணெய் மசாஜ் செய்தும், மெயினருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்து பரிசல் சவாரி செய்து ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீரை கண்டு மகிழ்ந்தனர்.

பின்னர் மீன் சமையல் செய்து சாப்பிட்டு விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கலைகட்டியது.

Views: - 18

0

0