மணப்புரம் கோல்ட் பைனான்ஸில் முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணம் பறிப்பு…
1 September 2020, 11:24 pmஆந்திரா: ஆந்திராவில் மணப்புரம் கோல்ட் பைனான்ஸில் முகமூடி கொள்ளையர்கள் இரண்டு பேர் துப்பாக்கியை காட்டி ரூ 51 ஆயிரத்தை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராயதுர்கத்தில் மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ் நிறுவன கிளை உள்ளது. அங்கு நேற்று மாலை 5 மணி அளவில் வந்த இரண்டு பேர் நகையை அடகு வைக்க வந்திருப்பதாக காவலாளியிடம் கூறி உள்ளே சென்றனர். உள்ளே சென்ற இரண்டு மர்மநபர்களில் ஒருவர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய நிலையில், மற்றொருவர் அங்கு இருந்த ஊழியர்களிடம் 51 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அருகிலிருந்த ஊழியர்களின் மேல் வீசிய விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து நிதி நி்றுவன ஊழியர்கள் போலீசில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி நோக்கி சென்றதாக தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஆந்திரா போலீசார் கர்நாடக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரு மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் ராயதுர்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0