இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
5 November 2021, 6:27 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மத்திய அரசு ஆதரவோடு திரிப்புரா மாநிலத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதலைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்துநிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரிபுராவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மத்திய அரசு மற்றும் திரிப்புரா மாநிலத்தில் ஆட்சி செய்யும் அம்மாநில அரசுகளின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தின்போது திரிப்புரா மாநிலத்தில் வசிக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதப்படுத்தி வருபவர்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு மற்றும் திரிப்புரா மாநில ப.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மாவட்ட தொண்டர் அணி செயலாளர் தஸ்தகீர் தலமையில் நடைப்பெற்ற இந்த கண்ட ஆர்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சையத் இர்பானுல்லா உசேனி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில பிரதிநிதி சாதிக்பாஷா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் நூர்முஹம்மத் ஆகியோர் மதிய அரசு உடனடியாக திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது மட்டுமின்றி அகதிகளாக முகம்ங்களில் வசித்து வரும் இவர்கள் மீது தொடர்ந்து அரங்கேற்றி வரும் கொலை வெறி தாக்குதலை தடுத்து நிறுத்திடவேண்டும், பூர்விகமாக குடியிருந்து வரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வழியுறுத்திக் கண்டன உரை ஆற்றினார்கள்.

Views: - 236

0

0