ஹோட்டல் மாடியில் ஊழியர் இறந்த நிலையில் உடல் கண்டெடுப்பு: செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரணை

Author: Udhayakumar Raman
25 October 2021, 12:07 am
Quick Share

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் பிரபல ஹோட்டல் மாடியில் ஊழியர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கேட்டரிங் டெக்னாலஜி படித்து மற்றும் எம்எஸ்சி படித்துள்ளார். இவர் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மூன்று தினங்களாக வீட்டுக்கு திரும்பாத நிலையில் இவரை பல இடங்களில் வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று இரவு உணவகத்தின் மேல் மாடியில் தண்ணீர் தொட்டிக்கு அருகே இவர் உடல் கருத்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதன் அருகில் மருந்து பாட்டில் ஒன்றும் உள்ளது மற்றும் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்துஉடலை கைப்பற்றிய செம்பனார்கோவில் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 157

0

0