கோவில் அர்ச்சகருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்

19 June 2021, 4:58 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக 4 ஆயிரம், 10 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. சுமார் 168 கோயில்களில் பணிபுரிந்து வரும் 170 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்களால் இதை வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் இளையராஜா மற்றும் இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 110

0

0