விவசாய துறை மாணவிகளுக்கு வகுப்பு எடுத்த சட்டமன்ற உறுப்பினர்

Author: kavin kumar
4 October 2021, 4:54 pm
Quick Share

திருவாரூர்:திருவாரூரில் விவசாய துறை மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வகுப்பு எடுத்தார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் இளவங்காரக்குடி கிராமத்தில் முன்னோடி இயற்கை விவசாயி, திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண்மைதுறை மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் அத்தியாவசியத்தையும் விளக்கிக் கூறினார். மேலும் நாட்டு காய்கறிகளையும், நாட்டு மாடு வகைகளையும் அதன் சிறப்புகளையும் மற்றும் நமது மாவட்டத்தில் புதுமையாக ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, சிவப்பு நெல்லி, மிளகு போன்ற அரிய வகை செடி, மர வகைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இறுதியாக மாணவிகள் நன்றி கூறுகையில், இதுவரை இதுபோன்ற ஒரு சிறப்பான அனுபவம் எங்களுக்கு கிடைத்ததில்லை எங்களது பல்கலைக்கழகத்தில் கிடைக்காத ஒரு அனுபவம் செயல்முறையாக நேரடியாக எங்களால் பார்க்க முடிந்தது என்று பெருமிதம் கொண்டு அனைவரும் நன்றி கூறினார்கள்.

Views: - 188

0

0