ரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திடீர் ஆய்வு

26 January 2021, 5:22 pm
Quick Share

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பணிகள் குறித்து அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 ஆண்டுகளுக்குப் பிறகு ராணிப்பேட்டை வரை ரயில் சரக்கு ரயில் சேவை தொடங்கியது .இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான முகமது ஜான் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், விரைவில் ராணிப்பேட்டை வரை பயணிகள் ரயில் சேவை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பாக ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி உள்ளதாகவும் விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என கூறினார் மேலும் இந்த ஆய்வின் போது அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முரளி முன்னாள் நகர செயலாளர் மணி நகர இளைஞரணி செயலாளர் உமர் ஆகியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Views: - 0

0

0