பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

18 October 2020, 4:56 pm
Quick Share

ஈரோடு: மனைவி குழந்தையுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓட்டுநர் எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்தவர் பூபதி. வாகன ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூபதி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பூபதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூபதி மது போதையில் உள்ளதால் விசாரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எஸ்பி அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0